सामग्री पर जाएँ
सर्वकोश
तिरुक्कुरळ् (सन्त तिरुवल्लुवर - तमिल वेद / उत्तरवेद: धर्म, अर्थ एवं काम सविस्तार हिन्दी भाषान्तर)

तिरुक्कुरळ् (सन्त तिरुवल्लुवर - तमिल वेद / उत्तरवेद: धर्म, अर्थ एवं काम सविस्तार हिन्दी भाषान्तर)

Tirukkural of Saint Tiruvalluvar in Hindi

सन्त तिरुवल्लुवर (अनुवादक: खेमानन्द 'रहत') द्वारा

DevanagariHindipublished334 पृष्ठ

पृष्ठ 203, कुल 334 में से

संदर्भ में पढ़ें
पृष्ठ 203

178 திருக்குறள் அதிகாரம் 77
5. படையியல்
77. படை மாட்சி
761. உறுப்புஅமைந்து ஊறுஅஞ்சா வெல்படை வேந்தன்
வெறுக்கையுள் எல்லாம் தலை.
762. உலைவிடத்து ஊறுஅஞ்சா வண்கண் தொலைவிடத்துத்
தொல்படைக்கு அல்லால் அரிது.
763. ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை
நாகம் உயிர்ப்பக் கெடும்.
764. அழிவின்று அறைபோகாது ஆகி வழிவந்த
வண்கண் அதுவே படை.
765. கூற்றுஉடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
ஆற்றல் அதுவே படை.
766. மறம்மானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு.
767. தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த
போர்தாங்கும் தன்மை அறிந்து.
768. அடல்தகையும் ஆற்றலும் இல்லானினும் தானை
படைத்தகையால பாடு பெறும்.
769. சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்
இல்லாயின் வெல்லும் படை.
770. நிலைமக்கள் சால உடைத்துஎனினும் தானை
தலைமக்கள் இல்வழிஃதில்.