तिरुक्कुरळ् (सन्त तिरुवल्लुवर - तमिल वेद / उत्तरवेद: धर्म, अर्थ एवं काम सविस्तार हिन्दी भाषान्तर)
Tirukkural of Saint Tiruvalluvar in Hindi
सन्त तिरुवल्लुवर (अनुवादक: खेमानन्द 'रहत') द्वारा
पृष्ठ 279, कुल 334 में से
संदर्भ में पढ़ें254 திருக்குறள் அதிகாரம் 114.
114. நாணுத் துறவுரைத்தல்
1131. காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடல்அல்லது இல்லை வலி.
1132. நோனா உடம்பும் உயிரும் மடல்ஏறும்
நாணினை நீக்கி நிறுத்து.
1133. நாணொடு நல்லாண்மை பண்டுஉடையேன் இன்றுஉடையேன்
காமுற்றார் ஏறும் மடல்.
1134. காமக் கடும்புனல் உய்க்குமே நாணொடு
நல்ஆண்மை என்னும் புணை
1135 தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர்.
1136. மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
படலொல்லா பேதைக்குஎன் கண்.
1137. கடல்அன்ன காமம் உழந்தும் மடல்ஏறாப்
பெண்ணிற் பெருந்தக்கது இல்
1138. நிறைஅரியா மன்அளியா என்னாது காமம்
மறைஇறந்து மன்று படும்.
1139. "அறிகிலா எல்லாரும் என்றோன் காமம்
மறுகின் மறுகும் மருண்டு.
1140. யாம்கண்ணிற் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா வாறு.