सामग्री पर जाएँ
सर्वकोश
तिरुक्कुरळ् (सन्त तिरुवल्लुवर - तमिल वेद / उत्तरवेद: धर्म, अर्थ एवं काम सविस्तार हिन्दी भाषान्तर)

तिरुक्कुरळ् (सन्त तिरुवल्लुवर - तमिल वेद / उत्तरवेद: धर्म, अर्थ एवं काम सविस्तार हिन्दी भाषान्तर)

Tirukkural of Saint Tiruvalluvar in Hindi

सन्त तिरुवल्लुवर (अनुवादक: खेमानन्द 'रहत') द्वारा

DevanagariHindipublished334 पृष्ठ

पृष्ठ 259, कुल 334 में से

संदर्भ में पढ़ें
पृष्ठ 259

234 திருக்குறள் அதிகாரம் 105.
105. நல்குரவு
1041. இன்மையின் இன்னாதது யாதுஎனின் இன்மையின்
இன்மையே இன்னா தது.
1042. இன்மை எனஒரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும்.
1043. தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
நல்குரவு என்னும் நசை.
1044 இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த
சொற்பிறக்கும் சோர்வு தரும்.
1045. நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்
துன்பங்கள் சென்று படும்.
1046. நற்பொருள நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தா
சொற்பொருள் சோர்வு படும்
1047. அறம்சாரா நல்குரவு ஈன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும்.
1048. இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு.
1049. நெருப்பினுள துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பாடு அரிது.
1050. துப்புரவு இல்லா துவரத துறவாமை
உப்பிற்கும் காடிக்கும கூற்று.