तिरुक्कुरळ् (सन्त तिरुवल्लुवर - तमिल वेद / उत्तरवेद: धर्म, अर्थ एवं काम सविस्तार हिन्दी भाषान्तर)
Tirukkural of Saint Tiruvalluvar in Hindi
सन्त तिरुवल्लुवर (अनुवादक: खेमानन्द 'रहत') द्वारा
पृष्ठ 251, कुल 334 में से
संदर्भ में पढ़ें226 திருக்குறள் அதிகாரம் 101
101. நன்றியில் செல்வம்
1001. வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுஉண்ணான்
செத்தான் செயக்கிடந்தது இல்.
1002. பொருளான்ஆம் எல்லாம்என்று ஈயாது இவறும்
மருளான்ஆம் மாணாப் பிறப்பு.
1003. ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவா
தோற்றம் நிலக்குப் பொறை.
1004. எச்சம்என்று என்எண்ணுங் கொல்லோ ஒருவரால்
நச்சப் படாஅ தவன்.
1005. கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
கோடிஉண் டாயினும் இல்.
1006. ஏதம் பெரும்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்குஒன்று
ஈதல் இயல்புஇலா தான்.
1007. அற்றார்க்குஒன்று ஆற்றாதான் செல்வம் மிகுகலம்
பெற்றாள் தமியள்மூத் தற்று.
1008. நச்சப் படாதவன் செல்வம் நடுஊருள்
நச்சு மரம்பழுத் தற்று.
1009. அன்புஒரீஇத் தற்செற்று அறம்நோக்காது ஈட்டிய
ஒண்பொருள் கொள்வார் பிறர்.
1010. சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி
வறங்கூர்ந் தனையது உடைத்து.