सामग्री पर जाएँ
सर्वकोश
तिरुक्कुरळ् (सन्त तिरुवल्लुवर - तमिल वेद / उत्तरवेद: धर्म, अर्थ एवं काम सविस्तार हिन्दी भाषान्तर)

तिरुक्कुरळ् (सन्त तिरुवल्लुवर - तमिल वेद / उत्तरवेद: धर्म, अर्थ एवं काम सविस्तार हिन्दी भाषान्तर)

Tirukkural of Saint Tiruvalluvar in Hindi

सन्त तिरुवल्लुवर (अनुवादक: खेमानन्द 'रहत') द्वारा

DevanagariHindipublished334 पृष्ठ

पृष्ठ 247, कुल 334 में से

संदर्भ में पढ़ें
पृष्ठ 247

222 திருக்குறள அதிகாரம் 99.
99 சான்றாண்மை
981. கடன்என்ப நல்லவைஎல்லாம் கடன்·அறிந்து
சான்றாண்மை மேற்கொள பவர்க்கு.
982. குணநலம் சான்றோர் நலனே பிறநலம்
எந்நலத்து உள்ளதூஉம் அன்று.
983. அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்துசால்பு ஊன்றிய தூண்.
984. கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு.
985. ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை.
986. சால்பிற்குக் கட்டளை யாதுஎனின் தோல்வி
துலைஅல்லார் கண்ணும் கொளல்.
987. இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாககால்
என்ன பயத்ததோ சால்பு.
988. இன்மை ஒருவற்கு இழிவுஅன்று சால்புஎன்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.
989. ஊழி பெயரினும் தாம்பெயரா சான்றாண்மைக்கு
ஆழி எனப்படு வார்.
990. சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்
தாங்காது மன்னோ பொறை.