तिरुक्कुरळ् (सन्त तिरुवल्लुवर - तमिल वेद / उत्तरवेद: धर्म, अर्थ एवं काम सविस्तार हिन्दी भाषान्तर)
Tirukkural of Saint Tiruvalluvar in Hindi
सन्त तिरुवल्लुवर (अनुवादक: खेमानन्द 'रहत') द्वारा
पृष्ठ 237, कुल 334 में से
संदर्भ में पढ़ें212 திருக்குறள் அதிகாரம் 94.
94. சூது
931. வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி யற்று
932. ஒன்றுாய்தி நூறுஇழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
நன்றுாய்தி வாழவதுஒர் ஆறு.
933. உருள்ஆயம் ஓவாது கூறின் பொருள்ஆயம்
போஒயப் புறமே படும்
934. சிறுமை பலசெய்து சீர்அழிக்கும் சூதின்
வறுமை தருவதுஒன்று இல்.
935. கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்ஆகி யார்.
936. அகடுஆரார் அல்லல உழப்பர்சூது என்னும்
முகடியால் மூடப்பட் டார்
937. பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின்.
938 பொருள்கெடுத்துப் பொய்மேல் கொளீஇ அருள்கெடுத்து
அல்லல் உழப்பிக்கும் சூது.
939. உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்
அடையாவாம் ஆயம் கொளின்.
940. இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
உழத்தொறூஉம் காதற்று உயிர்.