तिरुक्कुरळ् (सन्त तिरुवल्लुवर - तमिल वेद / उत्तरवेद: धर्म, अर्थ एवं काम सविस्तार हिन्दी भाषान्तर)
Tirukkural of Saint Tiruvalluvar in Hindi
सन्त तिरुवल्लुवर (अनुवादक: खेमानन्द 'रहत') द्वारा
पृष्ठ 233, कुल 334 में से
संदर्भ में पढ़ें208 திருக்குறள் அதிகாரம் 92.
92. வரைவின்மகளிர்
911. அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்
இன்சொல் இழுக்குந் தரும்.
912. பயன்தூக்கிப் பண்புஉரைக்கும் பண்புஇல் மகளிர்
நயன்தூக்கி நள்ளா விடல்.
913. பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில பிணந்தழீஇ யற்று.
914. பொருட்பொருளார் புன்னலம் தோயார் அருட்பொருள்
ஆயும் அறிவி னவா.
915. பொதுநலத்தா புன்னலம் தோயார் மதிநலத்தின்
மாண்ட அறிவி னவர்.
916. தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்
புன்னலம் பாரிப்பார் தோள்.
917. நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வர் பிறநெஞ்சில்
பேணிப் புணாபவர் தோள்.
918. ஆயும் அறிவினா அல்லாக்கு அணங்குஎன்ப
மாய மகளிர் முயக்கு.
919. வரைவுஇலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்
பூரியர்கள் ஆழும் அளறு.
920. இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீங்கப் பட்டார் தொடாபு.