तिरुक्कुरळ् (सन्त तिरुवल्लुवर - तमिल वेद / उत्तरवेद: धर्म, अर्थ एवं काम सविस्तार हिन्दी भाषान्तर)
Tirukkural of Saint Tiruvalluvar in Hindi
सन्त तिरुवल्लुवर (अनुवादक: खेमानन्द 'रहत') द्वारा
पृष्ठ 231, कुल 334 में से
संदर्भ में पढ़ें206 திருக்குறள் அதிகாரம் 91
91. பெண்வழிச் சேறல்
901. மனைவிழைவா மாண்பயன் எய்தார் வினைவிழைவார்
வேண்டாப் பொருளும் அது.
902. பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்
நாணாக நாணுத் தரும்.
903. இல்லாள்கண் தாழ்ந்த இயல்புஇன்மை எஞ்ஞான்றும்
நல்லாருள் நாணுத தரும்.
904. மனையாளை அஞ்சும மறுமைஇ லாளன்
வினைஆண்மை வீறுஎய்தல் இன்று.
905. இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற்று எஞ்ஞான்றும்
நல்லார்ககு நல்ல செயல்.
906. இமையாரின் வாழினும் பாடுஇலரே இல்லாள்
அமையாதோள் அஞ்சு பவர்.
907. பெண்ஏவல் செய்தொழுகும் ஆண்மையின் நாண்உடைப
பெண்ணே பெருமை உடைத்து.
908. நட்டார குறைமுடியார் நன்றுஆற்றார் நல்நுதலாள்
பெட்டாங்கு ஒழுகு பவர்.
909. அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
பெண்ஏவல் செய்வார்கண் இல்
910. எண்சேர்ந்த நெஞ்சத்து இடன்உடையார்க்கு எஞ்ஞான்றும்
பெண்சேர்ந்தாம் பேதைமை இல்.