सामग्री पर जाएँ
सर्वकोश
तिरुक्कुरळ् (सन्त तिरुवल्लुवर - तमिल वेद / उत्तरवेद: धर्म, अर्थ एवं काम सविस्तार हिन्दी भाषान्तर)

तिरुक्कुरळ् (सन्त तिरुवल्लुवर - तमिल वेद / उत्तरवेद: धर्म, अर्थ एवं काम सविस्तार हिन्दी भाषान्तर)

Tirukkural of Saint Tiruvalluvar in Hindi

सन्त तिरुवल्लुवर (अनुवादक: खेमानन्द 'रहत') द्वारा

DevanagariHindipublished334 पृष्ठ

पृष्ठ 215, कुल 334 में से

संदर्भ में पढ़ें
पृष्ठ 215

190 திருக்குறள் அதிகாரம் 83.
83. கூடா நட்பு
821. சீாஇடம் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவா நட்பு.
822. இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும்.
823. பலநல்ல கற்றக் கடைத்தும் மனம்நல்லர்
ஆகுதல் மாணார்க்கு அரிது.
824. முகத்தின இனிய நகாஅ அகத்துஇன்னா
வஞ்சரை அஞ்சப் படும்
825. மனத்தின் அமையா தவரை எனைத்துஒன்றும்
சொல்லினால் தேறற்பாற்று அன்று.
826. நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
ஒல்லை உணரப் படும்.
827. சொல்வணக்கம் ஒன்றாகண் கொள்ளற்க வில்வணக்கம்
தீங்கு குறித்தமை யான்.
828. தொழுதகை உள்ளும் படைஒடுங்கும் ஒன்னா
அழுதகண் ணீரும் அனைத்து.
829. மிகச்செய்து தம்எள்ளு வாரை நகச்செய்து
நட்பினுள் சாப்புல்லா பாற்று.
830. பகைநட்பாம் காலம் வருங்கால் முகம்நட்டு
அகம்நட்பு ஒரீஇ விடல்