तिरुक्कुरळ् (सन्त तिरुवल्लुवर - तमिल वेद / उत्तरवेद: धर्म, अर्थ एवं काम सविस्तार हिन्दी भाषान्तर)
Tirukkural of Saint Tiruvalluvar in Hindi
सन्त तिरुवल्लुवर (अनुवादक: खेमानन्द 'रहत') द्वारा
पृष्ठ 201, कुल 334 में से
संदर्भ में पढ़ें176 திருக்குறள் அதிகாரம் 76.
4. கூழியல்
76. பொருள் செயல்வகை
751. பொருள் அல்லவரைப் பொருளாகச் செய்யும்
பொருள்அல்லது இல்லை பொருள்.
752. இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு.
753. பொருள்என்னும் பொய்யா விளக்கம் இருள்அறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று.
754. அறன்ஈனும் இன்பமும்ஈனும் திறன் அறிந்து
தீதுஇன்றி வந்த பொருள்
755. அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல்.
756. உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த
தெறுபொருளும வேந்தன் பொருள்.
757. அருள்என்னும் அன்பான் குழவி பொருள்என்னும்
செல்வச் செவிலியால் உண்டு
758. குன்றுஏறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்துஒன்று
உண்டாகச் செய்வான் வினை.
759. செய்க பொருளைச் செறுநர் செருக்குஅறுக்கும்
எஃகுஅதனிற் கூரியது இல்.
760 ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியாக்கு எண்பொருள்
ஏனை இரண்டும ஒருங்கு