तिरुक्कुरळ् (सन्त तिरुवल्लुवर - तमिल वेद / उत्तरवेद: धर्म, अर्थ एवं काम सविस्तार हिन्दी भाषान्तर)
Tirukkural of Saint Tiruvalluvar in Hindi
सन्त तिरुवल्लुवर (अनुवादक: खेमानन्द 'रहत') द्वारा
पृष्ठ 191, कुल 334 में से
संदर्भ में पढ़ें166 திருக்குறள் அதிகாரம் 71.
71. குறிப்பு அறிதல்
701. கூறாமை நோக்கிக் குறிப்புஅறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக்கு அணி.
702. ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தொடு ஒப்பக் கொளல்.
703. குறிப்பின் குறிப்புணரா வாரை உறுப்பினுள்
யாது கொடுத்தும் கொளல்.
704 குறித்தது கூறாமைக் கொள்வாரொடு ஏனை
உறுப்புஓ ரனையரால் வேறு.
705. குறிப்பின் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்
என்ன பயத்தவோ கண்.
706 அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்.
707. முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்
காயினும் தான்முந் துறும்
708. முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி
உற்றது உணர்வார்ப் பெறின்.
709. பகைமையும் கேண்மையும் கண்உரைக்கும் கண்ணின்
வகைமை உணர்வார்ப் பெறின்.
710. நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்
கண்அல்லது இல்லை பிற.