तिरुक्कुरळ् (सन्त तिरुवल्लुवर - तमिल वेद / उत्तरवेद: धर्म, अर्थ एवं काम सविस्तार हिन्दी भाषान्तर)
Tirukkural of Saint Tiruvalluvar in Hindi
सन्त तिरुवल्लुवर (अनुवादक: खेमानन्द 'रहत') द्वारा
पृष्ठ 189, कुल 334 में से
संदर्भ में पढ़ें164 திருக்குறள் அதிகாரம் 70.
70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல்
691. அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.
692. மன்னா விழைய விழையாமை மன்னரால்
மன்னிய ஆக்கம் தரும்.
693. போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
தேற்றுதல் யார்க்கும் அரிது.
694. செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்
ஆன்ற பெரியார் அகத்து.
695. எப்பொருளும் ஓரார் தொடரார்மற்று அப்பொருளை
விட்டக்கால் கேட்க மறை.
696 குறிப்பு அறிந்து காலம் கருதி வெறுப்பில
வேண்டுப வேட்பச் சொலல்.
697 வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்
கேட்பினும் சொல்லா விடல்.
698 இளையர் இனமுறையர் என்றுஇகழார் நின்ற
ஒளியொடு ஒழுகப் படும்.
699. கொளப்பட்டேம் என்றுஎண்ணிக் கொள்ளாத செய்யார்
துளக்குஅற்ற காட்சி யவர்.
700 பழையம் எனக்கருதிப் பண்புஅல்ல செய்யும்
கெழுதகைமை கேடு தரும்.