सामग्री पर जाएँ
सर्वकोश
तिरुक्कुरळ् (सन्त तिरुवल्लुवर - तमिल वेद / उत्तरवेद: धर्म, अर्थ एवं काम सविस्तार हिन्दी भाषान्तर)

तिरुक्कुरळ् (सन्त तिरुवल्लुवर - तमिल वेद / उत्तरवेद: धर्म, अर्थ एवं काम सविस्तार हिन्दी भाषान्तर)

Tirukkural of Saint Tiruvalluvar in Hindi

सन्त तिरुवल्लुवर (अनुवादक: खेमानन्द 'रहत') द्वारा

DevanagariHindipublished334 पृष्ठ

पृष्ठ 177, कुल 334 में से

संदर्भ में पढ़ें
पृष्ठ 177

152 திருக்குறள் அதிகாரம் 64
2. அமைச்சியல்
64. அமைச்சு
631. கருவியும் காலமும செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்டது அமைச்சு.
632. வன்கண் குடிகாத்தல் கற்றுஅறிதல் ஆள்வினையொடு
ஐந்துடன் மாண்டது அமைச்சு.
633. பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
பொருத்தலும் வல்லது அமைச்சு.
634. தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்
சொல்லலும் வல்லது அமைச்சு.
635. அறன்அறிந்து ஆன்றுஅமைந்த சொல்லான்எஞ் ஞான்றும்
திறன்அறிந்தான் தேர்ச்சித் துணை.
636. மதிநுட்பம் நூலொடு உடையார்க்கு அதிநுட்பம்
யாவுள முன்நிற் பவை.
637. செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல்.
638. அறிகொன்று அறியான் எனினும் உறுதி
உழையிருந்தான் கூறல் கடன்.
639. பழுதுஎண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்ஒர்
எழுபது கோடி உறும்.
640. முறைப்படச சூழ்நதும் முடிவிலவே செய்வா
திறப்பாடு இலாஅ தவர்.