तिरुक्कुरळ् (सन्त तिरुवल्लुवर - तमिल वेद / उत्तरवेद: धर्म, अर्थ एवं काम सविस्तार हिन्दी भाषान्तर)
Tirukkural of Saint Tiruvalluvar in Hindi
सन्त तिरुवल्लुवर (अनुवादक: खेमानन्द 'रहत') द्वारा
पृष्ठ 173, कुल 334 में से
संदर्भ में पढ़ें148 திருக்குறள் அதிகாரம் 62.
62. ஆள்வினை உடைமை
611. அருமை உடைத்துஎன்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.
612. வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு.
613. தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னும் செருக்கு.
614 தாளாண்மைஇ ல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும்.
615. இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்துஊன்றும் தூண்.
616. முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.
617. மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளாள் தாமரையி னாள்.
618. பொறிஇன்மை யார்க்கும் பழிஅன்றுஅறிவு அறிந்து
ஆள்வினை இன்மை பழி.
619. தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக கூலி தரும்.
620. ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவுஇன்றித்
தாழாது உஞற்று பவர்: