सामग्री पर जाएँ
सर्वकोश
तिरुक्कुरळ् (सन्त तिरुवल्लुवर - तमिल वेद / उत्तरवेद: धर्म, अर्थ एवं काम सविस्तार हिन्दी भाषान्तर)

तिरुक्कुरळ् (सन्त तिरुवल्लुवर - तमिल वेद / उत्तरवेद: धर्म, अर्थ एवं काम सविस्तार हिन्दी भाषान्तर)

Tirukkural of Saint Tiruvalluvar in Hindi

सन्त तिरुवल्लुवर (अनुवादक: खेमानन्द 'रहत') द्वारा

DevanagariHindipublished334 पृष्ठ

पृष्ठ 165, कुल 334 में से

संदर्भ में पढ़ें
पृष्ठ 165

140 திருக்குறள் அதிகாரம் 58.
58. கண்ணோட்டம்
571. கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டுஇவ் உலகு.
572. கண்ணோட்டத்தது உலகியல் அஃதிலார்
உண்மை நிலக்குப் பொறை.
573. பண்என்னாம் பாடற்கு இயைபுஇன்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண்.
574. உளபோல் முகத்துஎவன் செய்யும் அளவினால்
கண்ணோட்டம் இல்லாத கண்.
575. கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
புண்என்று உணரப் படும்
576. மண்ணோடு இயைந்த மரத்துஅனையர் கண்ணோடு
இயைந்துகண் ணோடா தவர்.
577. கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலா கண்ணுடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல்.
578. கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்துஇவ் உலகு.
579. ஒறுத்துஆற்றும் பண்பினா கண்ணும்கண் ஓடிப்
பொறுத்துஆற்றும் பண்பே தலை.
580 பெயக்கண்டும் நஞ்சுஉண்டு அமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்.

तिरुक्कुरळ् (सन्त तिरुवल्लुवर - तमिल वेद / उत्तरवेद: धर्म, अर्थ एवं काम सविस्तार हिन्दी भाषान्तर) · पृष्ठ 165, कुल 334 में से · SarvaKosh