सामग्री पर जाएँ
सर्वकोश
तिरुक्कुरळ् (सन्त तिरुवल्लुवर - तमिल वेद / उत्तरवेद: धर्म, अर्थ एवं काम सविस्तार हिन्दी भाषान्तर)

तिरुक्कुरळ् (सन्त तिरुवल्लुवर - तमिल वेद / उत्तरवेद: धर्म, अर्थ एवं काम सविस्तार हिन्दी भाषान्तर)

Tirukkural of Saint Tiruvalluvar in Hindi

सन्त तिरुवल्लुवर (अनुवादक: खेमानन्द 'रहत') द्वारा

DevanagariHindipublished334 पृष्ठ

पृष्ठ 163, कुल 334 में से

संदर्भ में पढ़ें
पृष्ठ 163

138 திருக்குறள் அதிகாரம் 57.
57. வெருவந்த செய்யாமை
561. தக்காங்கு நாடிச் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து
562. கடிதுஓச்சி மெல்ல எறிக நெடிதுஆக்கம்
நீங்காமை வேண்டு பவர்.
563. வெருவந்த செய்தொழுகும் வெங்கோலன் ஆயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.
564. இறைகடியன் என்றுஉரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
உறைகடுகி ஒல்லைக் கெடும்.
565. அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
பேய்கண்டு அன்னது உடைத்து.
566. கடுஞ்சொல்லன் கண்இலன் ஆயின் நெடுஞ்செல்வம்
நீடுஇன்றி ஆங்கே கெடும்.
567. கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடுமுரண தேய்க்கும் அரம்.
568. இனத்துஆற்றி எண்ணாத வேந்தன் சினத்துஆற்றிச்
சீறின் சிறுகும் திரு.
569. செருவந்த போழ்தின் சிறைசெய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும்.
570. கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுஅல்லது
இல்லை நிலக்குப் பொறை.