सङ्गीतदर्पण (दामोदर पण्डित - तंजौर सरस्वती महल संस्करण, सङ्गीत एवं नाट्य लक्षण)
Sangita Darpana of Damodara Pandita (TMSSML Edition)
दामोदर पण्डित (सम्पादक: के. वासुदेव शास्त्री) द्वारा
पृष्ठ 27, कुल 258 में से
संदर्भ में पढ़ें15
ரங்களின் விவரம் காணப்படவில்லை. சில கர்நாடக ராகங்களைப்
பற்றிக் கடைசியில் பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தபோதிலும் பெரும்
பாலும் தற்காலத்தில் ஹிந்துஸ்தானி சம்பிரதாயத்திலுள்ள
ராகச் சாயைகளே விவரிக்கப்பட்டிருக்கின்றன. ஆகையால்
இவருடைய நூல் ஹிந்துஸ்தானி சங்கீதத்திற்கு ஆதாரமான
முதலாவது சாஸ்த்ரீய ப்ரமாணமுள்ள நூல் என்று சொல்ல
லாம். ஆயினும், இந்நூல் ஏற்பட்ட காலத்தில் 'கர்நாடகம்'
‘ஹிந்துஸ்தானி’ என்ற பாணிகள் ஸ்திரமாக ஏற்படவில்லையாகை
யால் இந்நூலிலுள்ள பல பகுதிகள் இரு பாணிகளுக்கும் ஆதார
மாகக் கொள்ளப்படும்.
பழைய நூல்களும்-தர்ப்பணமும்
நமது சங்கீதம் ஸாம வேதத்திலிருந்து உண்டானதாகக்
கூறப்படுகிறது. அதை உண்டாக்கிய சிருஷ்டிகர்த்தாவாகிய
பிரமன் அதை முதலில் நாரதருக்கு உபதேசித்தார். ஆகை
யால் நமது சங்கீதத்தின் முதல் நூல்கள் நாரதரால் எழுதப்
பட்ட நூல்களேயாகும். நாரதரால் எழுதப்பட்ட விரிவான
சங்கீத நூல் நமக்கு இப்பொழுது கிடைக்கவில்லை. நாரதர்
இயற்றியதாக 'சங்கீத மகரந்தம்' என்னும் ஒரு நூல் வட இந்
தியாவில் அச்சிடப்பட்டிருக்கிறது. ஆனால் அதன் போக்கைக்
கவனித்தால் அதில் பழைய நூலில் ஒரு சிறு பகுதியும், பெரும்
பகுதி பிற்காலத்திய சம்பிரதாயங்களிலிருந்தும் எடுத்து
எழுதப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. ஸாம வேதத்தின்
ஸ்வர லக்ஷணமாகிய 'நாரதீசீக்ஷா' என்னும் நூல்
நாரதரால் இயற்றப்பட்டிருக்கிறது. அது ஸாம வேதத்தில் உப
யோகிக்கப்படும் 7 ஸ்வரங்களை விவரிப்பதற்காக வந்ததெனினும்,
அதில் ஸாமவேதஸ்வரங்களுக்கும் மற்ற ரிக், யஜுர் வேதங்களின்
ஸ்வரங்களுக்கும், சங்கீதத்தில் வழங்கப்படும் ஸ்வரங்களுக்கும்
உள்ள சம்பந்தம் விவரிக்கப்பட்டிருக்கிறது. மேலும் 7 ஸ்வரங்
களும் உண்டாவதற்கு ஆதாரமான 22 ச்ருதிகளும் அவற்றின்
5 வகை ஜாதி பேதங்களும், ஸ்வரத் தொகுதிகளாகிய க்ராமங்