सङ्गीतदर्पण (दामोदर पण्डित - तंजौर सरस्वती महल संस्करण, सङ्गीत एवं नाट्य लक्षण)
Sangita Darpana of Damodara Pandita (TMSSML Edition)
दामोदर पण्डित (सम्पादक: के. वासुदेव शास्त्री) द्वारा
पृष्ठ 26, कुल 258 में से
संदर्भ में पढ़ें[Page 14]
அவ்விதம் கீழிருந்து மேலே செல்லும் பான்மையுடையதாக்
கிறது. தென்னாட்டில் ஸ்வரங்களின் உச்சரிப்புக் கீழிருந்து
மேலே செல்கின்றது என்பதற்கு இதையே ஓர் காரணமாகக்
கூறலாம். வட நாட்டில் இருந்த வீணையில் ஒவ்வொரு தந்தி
யையும் பல இடங்களில் அழுத்திப் பிடிப்பதால் பல ஸ்வரங்கள்
உண்டாகின்றன. அழுத்திப் பிடித்த தந்தியை விட்டதும் தந்தி
யின் முழு நீளத்திற்குரிய நாதம் சிறிது த்வனிக்கும். இது
அழுத்திப் பிடிப்பதனால் ஏற்படும் ஒவ்வொரு ஸ்வரத்திற்கும்
கீழே உள்ளது. ஆகையால் ஒவ்வொரு ஸ்வரமும் மேலிருந்து
கீழே சென்று முடிவதாகத் தோன்றும். அதை அனுசரித்த
குரலும் அவ்விதமே கீழே செல்லும். இவ்விதமாக ஏற்பட்ட
ஸ்வர உச்சரிப்பின் போக்கிலுள்ள மாறுபாடே தற்காலத்தில் கர்
னாடக, ஹிந்துஸ்தானி சங்கீதப் பாணிகளின் முக்கியமான வித்
தியாசமாகத் தெரிகிறது. ஸ்வரங்களின் வகைகளிலும் சஞ்சா
ரங்களிலும் ஒரேவித அமைப்புடன் கூடிய பல கர்னாடக ஹிந்
துஸ்தானி ராகங்கள் ஒரே பெயருடனோ, அல்லது மாறுபட்ட
பெயர்களுடனோ இருந்துவருகின்றன. ஆனால் அவற்றுள் இந்த
ஸ்வர உச்சரிப்பு மாறுபாடு மட்டும் காணப்படுகிறது.
நமது நூலாசிரியராகிய சதுர தாமோதரர் இந்நூல் எழுதிய
காலத்திலேயே, அதாவது சுமார் 1600-ம் வருஷத்தில், கர்
நாடக சாம்ராஜ்யமாகிய விஜயநகரத்தில் சங்கீதத்திற்குப் புத்
துயிர் அளிக்கப்பட்டு சுமார் 200 வருஷங்கள் ஆகிவிட்டன.
வித்யாரண்யர், ராம அமாத்யர் முதலியோர்களால் தொகுக்கப்
பட்ட ‘மேளம்’ என்ற ஏற்பாடு பழக்கத்திற்கு வந்துவிட்டது.
அப்படியிருந்தும் இந்நூலில் மேளம் என்ற ஏற்பாட்டைப்
பற்றிய பிரஸ்தாபமே கிடையாது. இதைக்கொண்டு தாமோ
தரர் கர்னாடக சங்கீதத்தை விவரிப்பதில் கவனம் செலுத்தவில்லை
என்று ஊகிக்கலாம்.
ராகாத்யாயத்தில் இவர் 48 ராகங்களுக்கு லக்ஷணங்கள்
கூறியிருப்பதில் புதிதாக ஏற்படுத்தப்பட்ட கர்னாடக சம்பிரதா
யப்படி ராகங்களில் பிரயோகிக்கப்படும் ப்ரக்ருதி, விக்ருத ஸ்வ