सामग्री पर जाएँ
सर्वकोश
सङ्गीतदर्पण (दामोदर पण्डित - तंजौर सरस्वती महल संस्करण, सङ्गीत एवं नाट्य लक्षण)

सङ्गीतदर्पण (दामोदर पण्डित - तंजौर सरस्वती महल संस्करण, सङ्गीत एवं नाट्य लक्षण)

Sangita Darpana of Damodara Pandita (TMSSML Edition)

दामोदर पण्डित (सम्पादक: के. वासुदेव शास्त्री) द्वारा

DevanagariSanskritpublished258 पृष्ठ

पृष्ठ 28, कुल 258 में से

संदर्भ में पढ़ें
पृष्ठ 28

16

களின் மூன்று வகைகளும், ஒவ்வொரு க்ராமத்திலும் உண்டா
கும் ஏழு மூர்ச்சனைகளும், சிறிய பிடிகளாகிய தானங்களும்,
ஆதியில் ஏற்பட்ட ஏழு ராகங்களும் விவரிக்கப்பட்டிருக்கின்றன.
இதைத் தவிர நாரதரால் இயற்றப்பட்ட நூல் வேறு ஒன்றும்
நமக்குக் கிடைக்கவில்லை. நாட்டியம் என்னும் நாடகக் கலைக்கு
ஸங்கீதம் ஓர் அங்கமாகையால் நாட்டிய சாஸ்திர ஆசிரியராகிய
பரதமுனி நாரதரிடமிருந்து ஸங்கீதக் கலையை கற்று அதை
நாட்டிய சாஸ்திரத்தின் 28 முதல் 36 வது அத்தியாயத்தில்
விவரித்திருக்கிறார். இதுவே நமது சங்கீதத்திற்கு விரிவான
முதல் நூலாகும்.
தத்திலர், மதங்கர் இவர்களுடைய நூல்களும் மிகப் பழைய
நூல்களைச் சேர்ந்ததாகும். பார்ச்வதேவர் என்ற ஜைன முனி
வரால் இயற்றப்பட்ட ‘ஸங்கீத ஸமயஸாரம்’ என்னும் நூல் பிற்
காலத்திய நூல்களில் முதலாவதாகும். பிறகு சார்ங்கதேவரால்
12 ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ‘ஸங்கீத ரத்னாகரம்’ பழைய
நூல்களை யெல்லாம் தொகுத்து எழுதப்பட்ட விரிவான நூலா
கும். அதற்குச் சற்றுப் பிந்தி ஏற்பட்டது ஸங்கீத ஸுதாகரம்.
இவைகளே நமது கலைகள் மறைந்துபோன 14, 15-வது நூற்
றாண்டுக்குமுன் எழுதப்பட்ட நூல்கள்.
நமது, சங்கீததர்ப்பணம், 16-வது நூற்றாண்டில் எழுதப்பட்
டது. நமது கலைகளுக்குப் புத்துயிரளிக்கப்பட்ட பிறகு ஏற்
பட்ட வடநாட்டு சம்பிரதாய நூல்களில் முதலில் ஏற்பட்டது
என்று சொல்லலாம். இதில் ஸங்கீத ரத்னாகரம் முதலிய
பழைய நூல்களில் கூறப்பட்டுள்ள பகுதிகளில் ஆசிரியர் காலத்
தில் பழக்கத்திலுள்ளதும், பழக்கத்திற்குக் கொண்டுவரக் கூடி
யதுமான பகுதிகளை மிகவும் தெளிவாகவும், சுருக்கமாகவும்
கூறியிருக்கிறார். இவருடைய நூல் வெகு சீக்கிரத்தில் ஸங்கீத
ரத்னாகரத்துக்கு சமானமாக ஒப்புக் கொள்ளப்பட்டு இதன்
பகுதிகள் மேற்கோள்களாக எடுத்துக் கையாளப்பட்டு வந்தன
என்று தெரிகிறது. சுமார் 1640-ம் வருஷத்தில் சிவாஜியின் தகப்
ரான ஷாஜி மன்னர் ஆஸ்தானத்தில் இருந்த நாட்டியாசாரியரான