सामग्री पर जाएँ
सर्वकोश
सङ्गीतदर्पण (दामोदर पण्डित - तंजौर सरस्वती महल संस्करण, सङ्गीत एवं नाट्य लक्षण)

सङ्गीतदर्पण (दामोदर पण्डित - तंजौर सरस्वती महल संस्करण, सङ्गीत एवं नाट्य लक्षण)

Sangita Darpana of Damodara Pandita (TMSSML Edition)

दामोदर पण्डित (सम्पादक: के. वासुदेव शास्त्री) द्वारा

DevanagariSanskritpublished258 पृष्ठ

पृष्ठ 23, कुल 258 में से

संदर्भ में पढ़ें
पृष्ठ 23

11
யிலும் கையாளப்படவில்லை. இவரே தனது 'சதுர் தண்டி
ப்ரகாசிகை' என்னும் நூலில் ராகங்களுக்கு லக்ஷணம் கூறும்
போது 72 மேளம் என்ற ஏற்பாட்டுக்கு முக்கியத்வம் கொடுக்கா
மல், வித்யாரண்யர், கோவிந்த தீக்ஷிதர் இவர்களுடைய
வழியையே பின்பற்றி 19 மேளங்களை ஆதாரமாகக்கொண்டு
ராகங்களின் லக்ஷணங்களை விவரித்திருக்கிறார். இவருக்கு
சுமார் 50 வருஷங்களுக்குப் பிந்தியவராகிய தஞ்சை ஸகாஜி மன்
னர் ராக லக்ஷணங்களைப்பற்றித் தனது ஆஸ்தான வித்வான்
களின் அபிப்பிராயங்களைத் தனித்தனியே தெரிவிக்கும்படி ஏற்
பாடு செய்து, அவற்றுள் 10 வித அபிப்பிராயங்களை 10 சுவடி
களில் எழுதி வைத்திருக்கிறார். அவற்றுள் மன்னரின் சொந்த
அபிப்பிராயம் அடங்கிய நூலும் ஒன்று. இந்த லக்ஷணங்
களையே இவருடைய இளைய சகோதரரான துளஜா மகாராஜா
தனது சங்கீத சாராம்ருதத்தில் கையாண்டிருக்கிறார். இந்த
லக்ஷண நூல்களில் ப்ரக்ருதி, விக்ருத ஸ்வரங்களில் 20 பேதங்
கள் காணப்படுகின்றன.
ஆனால் நாளடைவில் வேங்கடமகியின் 12 ஸ்வர ஸ்தானம்,
16 ஸ்வரம், 72 மேளம் என்ற ஏற்பாட்டுக்கு விசேஷமான
ஆதரவு ஏற்பட்டு அதுவே இப்பொழுதும் வழங்கிவருகிறது.
இதுவே கர்நாடக சங்கீதம் உற்பத்தியான விவரம்.
வித்யாரண்யர் காலத்தில் விஜயநகரத்தில் புத்துயிர் பெற்று
வளர்ந்த சங்கீதமே கர்நாடக சங்கீதம். இதில் பழைய சாஸ்
திரத்தில் கண்ட ராக லக்ஷணங்கள் முற்றிலும் மறைந்தபோதி
லும் சம்பிரதாயம் சுத்தமாகக் காப்பாற்றப்பட்டு வந்திருப்
பதால் ராகங்கள் ரக்தியுடன் விளங்குகின்றன.
வட நாட்டில் அந்நியர் படையெடுப்பினால் கலகங்கள்
ஏற்பட்டபோதிலும் அவர்கள் ஆட்சித் தலைநகராகிய டில்லிக்கு
வெகு தூரத்தில் உள்ள வங்காளம, ஒரிஸ்ஸா, மாளவம், கூர்ஜரம்
மகாராஷ்டிரம் முதலிய இடங்களில் பழைய சங்கீத இலக்கிய
மும், இலக்கணமும், வெகுவாகக் காப்பாற்றப்பட்டுவந்தன.