सामग्री पर जाएँ
सर्वकोश
सङ्गीतदर्पण (दामोदर पण्डित - तंजौर सरस्वती महल संस्करण, सङ्गीत एवं नाट्य लक्षण)

सङ्गीतदर्पण (दामोदर पण्डित - तंजौर सरस्वती महल संस्करण, सङ्गीत एवं नाट्य लक्षण)

Sangita Darpana of Damodara Pandita (TMSSML Edition)

दामोदर पण्डित (सम्पादक: के. वासुदेव शास्त्री) द्वारा

DevanagariSanskritpublished258 पृष्ठ

पृष्ठ 24, कुल 258 में से

संदर्भ में पढ़ें
पृष्ठ 24

12

ஆகையால் பழைய நூல்களில் உள்ள லக்ஷணங்கள் இன்னும்
வட நாட்டு சங்கீதத்தில் பிரசாரத்தில் இருந்துவருகின்றன.
உதாரணமாக ஒவ்வொரு ராகத்திற்குமுள்ள வாதி, சம்வாதி
லக்ஷணம் இன்றும் சம்பிரதாயத்தில் இருந்துவருகிறது.
மூர்ச்சனா லக்ஷணமும் ஒருவகையில் ‘பகட்’ என்ற பிடிகளின்
உருவமாக மாறி உயிருடன் இருக்கிறது. எனினும், சம்பிரதா
யம் சுத்தமாகக் காப்பாற்றப்பட்ட இடங்கள் அரிதாயின. அதன்
காரணம் வருமாறு: டில்லி சுல்தான்கள் 13-வது நூற்றாண்டுமுதல்
ஸ்திரமாக இந்த தேசத்தையே தங்கள் தாயகமாகக்கொண்டு
இந்த தேசத்திலுள்ள மத விஷயத்தில் அதிகப் பற்று இல்லாமற்
போனாலும், நம் தேசத்திய கலைகளில் பற்றுடையவர்களாய்
அதற்கு ஆதரவளிக்க ஆரம்பித்தனர். அவர்களுடைய ஆதரவு
பெற்ற நமது தேசீய வித்வான்களும் சுல்தான்களைத் திருப்தி
செய்வதில் ஈடுபட்டனர். அதனால் டில்லியில் சுல்தான்களுக்குப்
பிரியமான பாரசீக சங்கீத, நாட்டியங்களின் சாயை வடநாட்டுக்
கலைகளில் சம்பந்தப்பட ஆரம்பித்தது. ஆகையால் வடநாட்டு
சங்கீத சம்பிரதாயத்தில் பழைய லக்ஷணங்கள் உயிருடன் காப்
பாற்றப்பட்டு வந்தபோதிலும், பாரசீகப் பாணிகளின் கலப்பு
இருந்தே வந்திருக்கிறது.
ஆனால் பல தேசத்து சங்கீதப் பாணிகளை ஊன்
றிக் கவனித்தால் எல்லாவற்றிலும் அநேகமாக ஒரே
விதமான ஸ்வர ஸ்தானங்களில் உண்டான ஸ்வரங்களே உபயோ
கப்படுகின்றன என்பதும், ஸ்வரங்களை உச்சரிக்கும் மாதிரியில்
ஓர்முக்கியமான வித்தியாசம் இருக்கிறது என்பதும் தெரியவரும்.
இவ்வித்தியாசத்தை நமது தேசத்திலுள்ள வடநாட்டுத், தென்
னாட்டுப் பாணிகளிலும் இவை யிரண்டுக்கும் வேறுபட்ட
ஐரோப்பிய சங்கீதத்திலும் இலகுவாகக் கண்டுகொள்ளலாம்.
இவ்விதமான உச்சரிப்பு மாறுபாடு நம் நாட்டின் தெற்குக்
கோடியிலிருந்து வடக்குக் கோடிக்குப் போவதற்குள் கொஞ்சம்
கொஞ்சமாக அதிகரித்து வருவது ஊன்றிக் கவனிப்பவர்களுக்கு
நிதர்சனமாகும். பிரதம சிக்ஷையில் ஸப்த ஸ்வரங்களை உச்சரிக்
கையிலேயே இந்த வித்தியாசத்தை மிகவும் தெளிவாக உணர