सामग्री पर जाएँ
सर्वकोश
सङ्गीतदर्पण (दामोदर पण्डित - तंजौर सरस्वती महल संस्करण, सङ्गीत एवं नाट्य लक्षण)

सङ्गीतदर्पण (दामोदर पण्डित - तंजौर सरस्वती महल संस्करण, सङ्गीत एवं नाट्य लक्षण)

Sangita Darpana of Damodara Pandita (TMSSML Edition)

दामोदर पण्डित (सम्पादक: के. वासुदेव शास्त्री) द्वारा

DevanagariSanskritpublished258 पृष्ठ

पृष्ठ 22, कुल 258 में से

संदर्भ में पढ़ें
पृष्ठ 22

10

படும் விக்ருத ஸ்வரங்களையும் அவற்றின் ஆரோஹண அவரோ
ஹண வரிசையையும் நிச்சயித்தனர். ஒரே விதமான விக்ருத
ஸ்வரங்களையுடைய ராகங்களைத் தொகுதியாகச் சேர்த்தனர்.
ஒவ்வொரு தொகுதிக்கும் 'மேளம்' என்ற புதிய பெயரிட்டு
ஒவ்வொரு தொகுதியிலும் ப்ரசித்தமான ராகத்தின் பெயரை
அந்தந்த மேளத்திற்கு இட்டனர்.
இவ்வாறாக வித்யாரண்யரால் விவரிக்கப்பட்ட 50 ராகங்
களும் 15 மேளங்களாகத் தொகுக்கப்பட்டன. அம்முறையைப்
பின்பற்றியே விஜயநகர ராஜ்யத்தில் மந்திரியாக இருந்த ராம
அமாத்யர் மேளங்களை இருபதாகத் தொகுத்தார். அவருக்குப்
பிந்திய காலத்தவராகிய தஞ்சை மன்னர் ரகுநாத நாயக்கரும்
அவருடைய மந்திரி கோவிந்த தீக்ஷிதரும் வித்யாரண்யருடைய
15 மேளங்களையே பின்பற்றினர். புதிது புதிதாக நாட்டின்
பல பகுதிகளிலும் ஒதுங்கிக்கிடந்த ராகங்கள் கண்டுபிடிக்கப்
பட்டு வந்ததினால் மேளங்களின் எண்ணிக்கை வரவர அதிகரித்
தது. ராகங்களில் உபயோகிக்கப்பட்டுவரும் ப்ரக்ருதி விக்ருத
ஸ்வரங்கள் எல்லாவற்றையும் நிச்சயமாகக் கணக்கிட்டு அவற்
றைக்கொண்டு எத்தனை தொகுதிகள் ஏற்படக்கூடும் என்பதை
ப்ரஸ்தார (Permutation and Combination) முறையில் கணக்
குப் பார்க்க ஆரம்பித்தனர். அப்படிப் பார்க்கையில் ஒரு ஸ்தாயி
யில் 12 ஸ்வர ஸ்தானங்கள் அமைக்கப்பட்ட வீணையை ஆதார
மாகக் கொண்டு அப்பன்னிரண்டு ஸ்தானங்களிலும் 12 ஸ்வரங்
களும், அவற்றுள் நான்கு ஸ்தானங்களில் ஒவ்வொன்றிலும்
இரண்டு ஸ்வரங்களும் உண்டாகின்றன என்று வைணிக நிபுணர்
கள் தீர்மானித்தனர். இந்த 16 ஸ்வரங்களைக்கொண்டு 72 மேளங்
கள் ஏற்படலாமென்று நிச்சயித்தனர். இந்த ஏற்பாட்டை
வகுப்பதில் முதல் ஸ்தானம் வகித்தவர் தஞ்சை மந்திரி
கோவிந்த தீக்ஷிதரின் புதல்வராகிய 'வேங்கடமகி' என்னும்
வைணிகர். இவர் ராகங்களுக்குப் பல கீதங்களை அமைத்து
ப்ரசித்தி பெற்றவர். ஆனால் இவர் தொகுத்த 72 மேளம் என்ற
ஏற்பாடு இவர் காலத்திலும் பிறகு சுமார் 100 வருஷங்கள் வரை