सङ्गीतदर्पण (दामोदर पण्डित - तंजौर सरस्वती महल संस्करण, सङ्गीत एवं नाट्य लक्षण)
Sangita Darpana of Damodara Pandita (TMSSML Edition)
दामोदर पण्डित (सम्पादक: के. वासुदेव शास्त्री) द्वारा
पृष्ठ 21, कुल 258 में से
संदर्भ में पढ़ें9
நூல்களாகிய நந்திகேச்வர சம்ஹிதை, பரதர் நாட்டிய சாஸ்திரம்,
மதங்கர் ப்ருஹத்தேசி, தத்திலம் முதலியவைகளும், அவற்றைத்
தொகுத்த சங்கீத ரத்னாகரம் என்னும் நூலும், ஆகமங்களிலும்,
புராணங்களிலும் உள்ள பகுதிகளும் இருந்து வந்தன. இவை
களில் ராகங்களின் சாயைக்கு ஆதாரமாக (1) மூர்ச்சனைகளை
யும், மூர்ச்சனைகள் பிறந்த ஷட்ஜக்ராமம், மத்யக்ராமம் என்ற
இருவகை ஸ்வரத் தொகுதிகளையும் (2) வாதிஸம்வாதிகளையும்
(3) அம்ச, நியாஸ, க்ரஹ ஸ்வரங்களையும் (4) ஸ்தாயிஸ்வரக்கார்
வைகள் ஏழு வகையின் விசேஷத்தையும் (5) ஆரோஹி, அவ
ரோஹி வர்ணங்களில் எதில் ராகப் பிரகாசம் ஏற்படுகிறது என்
பதையும் தெரிந்து எழுதியிருக்கிறார்கள். ராகங்களுக்கு ஆதார
மான தாய் ராகங்கள் போன்ற ‘ஜாதி’ களைப் பற்றியும் விவரித்
திருக்கிறார்கள். ஆனால் சம்பிரதாயம் சிதறிப்போன காரணத்
தினால் இப்பகுதிகளையெல்லாம் பிற்காலத்தில் தெளிவாக அறிந்து
அப்பியாசம் செய்ய முடியவில்லை. ராகங்களே ஆங்காங்கு நாட்
டின் பல பகுதிகளில் ஒதுங்கியிருந்தன. அவைகளைத் தேடி ஒரு
உருவுக்குக் கொண்டுவருவதே ஒரு அரிய சாதனையாயிற்று. இந்
தத் தொண்டில் வித்யாரண்யரே பங்கெடுத்துக்கொண்டு ‘ஸங்கீத
ஸாரம்’ என்ற நூலை எழுதியதாகத் தெரிகிறது. அந்நூல் இப்
போது கிடைக்கவில்லையாயினும் 16-ம் நூற்றாண்டில் தஞ்சை
மன்னர் ரகுநாத நாயக்கர், அவர் மந்திரி கோவிந்த தீக்ஷிதர்
இவர்கள் இயற்றிய ‘சங்கீத ஸுதா’ என்னும் நூலில் அதைப்
பற்றிச் சில குறிப்புகள் கிடைக்கின்றன. வித்யாரண்யர் முயற்சி
யால் 50 ராகங்கள் நிச்சயமான உருவத்துடன் தேடிச் சேர்க்கப்
பட்டதாகத் தெரிகிறது. ஆனால் அவை தென்னாட்டின் பல
பகுதிகளிலிருந்து கிடைத்ததால் அவைகளின் சாயைகளுக்கும்
பழைய நூல்களில் அதே பெயரில் விவரிக்கப்பட்ட ராகங்களின்
சாயைகளுக்கும் மாறுபாடுகள் இருந்தன. பழைய நூல்களில்
விவரிக்கப்பட்ட லக்ஷணங்களை இவற்றிற்குத் தெரிந்தெழுதுவது
முடியாத காரியமாகப் போயிற்று. ராகங்களின் உருவத்தைக்
காப்பாற்றுவதற்காக ஏதாவது ஓர் ஏற்பாடு செய்யவேண்டியது
அவசியமாயிற்று. வீணையைக்கொண்டு ராகங்களில் உபயோகப்