सामग्री पर जाएँ
सर्वकोश
सङ्गीतदर्पण (दामोदर पण्डित - तंजौर सरस्वती महल संस्करण, सङ्गीत एवं नाट्य लक्षण)

सङ्गीतदर्पण (दामोदर पण्डित - तंजौर सरस्वती महल संस्करण, सङ्गीत एवं नाट्य लक्षण)

Sangita Darpana of Damodara Pandita (TMSSML Edition)

दामोदर पण्डित (सम्पादक: के. वासुदेव शास्त्री) द्वारा

DevanagariSanskritpublished258 पृष्ठ

पृष्ठ 20, कुल 258 में से

संदर्भ में पढ़ें
पृष्ठ 20

8

குச் சரியான விடையளிக்க வேண்டுமானால் ஹிந்துஸ்தானி, கர்
நாடகம் என்ற இரு சம்பிரதாயங்களும் தொன்றுதொட்டு இருப்
பவைகளா அல்லது சமீபத்தில் உண்டானவைகளா? அப்படியா
னால் எப்பொழுது எவ்விதம் உண்டாயின? என்பதை ஆராய
வேண்டும்.
நமது பழைய சங்கீத நூல்களில் நமது பாரத தேசத்
திலேயே நாட்டுக்குநாடு மக்களின் ருசி சிறிது சிறிது மாறுபா
டுடையதாகவே வளர்ந்து வந்திருக்கிறது என்று சொல்லப்படு
கிறது. இதைக் கவிதையில் 'ரீதி' எனவும், இசையில் 'கீதி'
எனவும், தாளத்தில் 'மார்க்கம்' எனவும், நாடக இயலில்
'வ்ருத்தி' எனவும் பெயரிட்டிருக்கிறார்கள். ஆனால் தென்னாட்
டுப் பாணி, வடநாட்டுப் பாணி என்ற இந்தப் பாகுபாடு பதின்
மூன்றாவது நூற்றாண்டு வரையில் இருந்ததாகத் தெரிய வில்லை.
10-வது நூற்றாண்டுக்குப் பிறகு வட நாட்டிலும்,
13-வது நூற்றாண்டுக்குப் பிறகு தென்னாட்டிலும் படை
யெடுத்தவர்கள் நமது பொருட் செல்வங்களோடு நில்லாமல்,
கலைச் செல்வங்களையும், கலைஞர்களையும் தமது ராஜதானிக்குப்
பலவந்தமாக இட்டுச் சென்றார்கள் என்று தெரிகிறது.
அங்கே அவசியம் மதமாற்றம் ஏற்படுமென்று பயந்த
கலைஞர்கள் தங்கள் கலை அறிவை மறைத்தும், கலை நூல்
களை எரித்தும், புதைத்தும் வந்ததினால் நமது கலைகள்
பெரும்பாலும் அழிந்துபோயின. 14வது நூற்றாண்டுக்குப்
பிறகு தென்னாட்டில் அமைதி நிலவி, விஜய நகர மன்னர்களாலும்
அவர்கள் மந்திரியாகிய வித்யாரண்யர் முதலியவர்களாலும்,
மறைந்த நமது சாஸ்திரங்களும், கலைகளும் புத்துயிர் பெற்று
எழுந்தன. ஆனால் சம்பிரதாயங்கள் இடையே கத்தரிக்கப்பட்டுப்
போனதால் பழய நூல்களில் பல பகுதிகளும், அவற்றை அப்பி
யாசம் செய்யும் முறையும், புத்துயிர் அளிக்க முன்வந்தவர்
கர்களுக்கு விளங்கவில்லை. ஒவ்வொரு சாஸ்திரத்திலும், கலை
யிலும் அரைகுறை சம்பிரதாயங்களை ஆதாரமாகக்கொண்ட பல
புதிய முறைகள் தோன்ற ஆரம்பித்தன. சங்கீதத்தில் பழைய