सङ्गीतदर्पण (दामोदर पण्डित - तंजौर सरस्वती महल संस्करण, सङ्गीत एवं नाट्य लक्षण)
Sangita Darpana of Damodara Pandita (TMSSML Edition)
दामोदर पण्डित (सम्पादक: के. वासुदेव शास्त्री) द्वारा
पृष्ठ 19, कुल 258 में से
संदर्भ में पढ़ेंமுகவுரை.
‘ஸங்கீத தர்ப்பணம்’ என்ற பெயர் புனைந்த இந்நூல் ‘சதுர
தாமோதர பண்டிதர்’ என்பவரால் 16-ம் நூற்றாண்டில் எழுதப்
பட்டது. இதில் நர்த்தனம், அபிநயம் உள்பட சங்கீதத்தின்
எல்லாப் பகுதிகளிலும் அக்காலத்தில் வழங்கிவந்த சாஸ்திரம்,
சம்பிரதாயம் இரண்டும் பூர்ணமாகவும், தெளிவாகவும் விவரிக்
கப்பட்டுள்ளன. அக்காலத்தில் ஹிந்துஸ்தானி சங்கீதம், கர்
நாடக சங்கீதம் என்ற பாகுபாடு தற்காலத்தில் உள்ளதுபோல்
அவ்வளவு நன்றாக ஏற்படவில்லை. நமது ஆசிரியர் ஆந்திர
தேசத்தில் பிறந்து, பிறகு டில்லியில் ஜிஹாங்கீர் சக்கர
வர்த்தியால் ஆதரிக்கப்பட்டவராகத் தெரிகிறது. ஆகையால்
அந்தக் காலத்தில் தென்னாட்டிலும், வட நாட்டிலும்
இருந்துவந்த சங்கீத சம்பிரதாயங்கள் பூராவும் அவருக்கு நன்
றாக அறிந்து கொள்வதற்கான வசதி ஏற்பட்டிருக்கிறது. இவர்
சாஹித்திய சங்கீத நிபுணர்களின் பரம்பரையில் பிறந்தவர்.
இவருடைய தகப்பனார் ஜயதேவருடைய கீதகோவிந்தத்திற்கு
மிகவும் விஸ்தாரமாக ‘ச்ருதி ரஞ்சனி’ என்ற பெயருடன் ஓர்
வியாக்கியானம் எழுதிய ‘லக்ஷ்மீதரர்’ என்பவர். அன்னார் அந்த
வியாக்கியானத்தில் பல சங்கீத நூல்களைப்பற்றிப் பிரஸ்தாபித்
திருக்கிறார். ‘ராகதீபிகை’, ‘ரங்கலக்ஷ்மீ விலாசம்’, ‘வாமதேவீ
யம்’, ப்ரதாப மகாராஜாவால் எழுதப்பட்ட ‘சங்கீத சூடாமணி’,
இவை அவரால் பிரஸ்தாபிக்கப்பட்ட நூல்கள். இவர் மேலும்
‘ருதுக்ரீடா விவேகம்’ என்ற ருதுவர்ணனை க்ரந்தத்தையும்,
‘பரத சாஸ்திர க்ரந்தம்’ ஒன்றையும் இயற்றியிருக்கிறார்.
லக்ஷ்மீதரர் குண்டூர் ஜில்லாவில் ‘செருகூரு’ என்னுமிடத்தில்
வாழ்ந்து வந்ததாகத் தெரிகிறது. விஜயநகர மன்னராகிய திரு
மலராயர் (1570-1573) இவரை ஆதரித்திருக்கிறார். ஆகையால்
தாமோதரருடைய காலம் 16-ம் நூற்றாண்டின் இறுதியும் 17-ம்
நூற்றாண்டின் முற்பகுதியுமாகும்.
கர்நாடக, ஹிந்துஸ்தானி பாணிகளின் வரலாறு
நமது ஆசிரியர் எழுதியிருப்பது கர்நாடக சம்பிரதாயமா
ஹிந்துஸ்தானி சம்பிரதாயமா என்பது அடுத்த கேள்வி. இதற்