सामग्री पर जाएँ
सर्वकोश
तिरुक्कुरळ् (सन्त तिरुवल्लुवर - तमिल वेद / उत्तरवेद: धर्म, अर्थ एवं काम सविस्तार हिन्दी भाषान्तर)

तिरुक्कुरळ् (सन्त तिरुवल्लुवर - तमिल वेद / उत्तरवेद: धर्म, अर्थ एवं काम सविस्तार हिन्दी भाषान्तर)

Tirukkural of Saint Tiruvalluvar in Hindi

सन्त तिरुवल्लुवर (अनुवादक: खेमानन्द 'रहत') द्वारा

DevanagariHindipublished334 पृष्ठ

पृष्ठ 269, कुल 334 में से

संदर्भ में पढ़ें
पृष्ठ 269

244 திருக்குறள் அதிகாரம் 109.

  1. களவியல்
  2. தகையணங்குறுத்தல்
  3. அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
    மாதர்கொல் மாலும்என் நெஞ்சு.
  4. நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
    தானைகொண் டன்னது உடைத்து.
  5. பண்டுஅறியேன் கூற்றுஎன் பதனை இனியறிந்தேன்
    பெண்தகையான் பேரமர்க் கட்டு.
  6. கண்டாஅ உயிர்உண்ணும் தோற்றத்தான் பெண்தகை
    பேதைக்கு அமர்த்தன கண்.
  7. கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
    நோக்கம்இம் மூன்றும் உடைத்து.
  8. கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்குஅஞர்
    செய்யல மன்இவள் கண்.
  9. கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர்
    படாஅ முலைமேல் துகில்.
  10. ஒண்ணுதற்கு ஒஒ உடைந்ததே ஞாட்பினுள்
    நண்ணாரும் உட்கும்என் பீடு.
  11. பிணைஏர் மடநோக்கும் நாணும் உடையாட்டு
    அணிஎவனோ ஏதில தந்து.
  12. உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
    கண்டார் மகிழசெய்தல் இன்று.