सामग्री पर जाएँ
सर्वकोश
तिरुक्कुरळ् (सन्त तिरुवल्लुवर - तमिल वेद / उत्तरवेद: धर्म, अर्थ एवं काम सविस्तार हिन्दी भाषान्तर)

तिरुक्कुरळ् (सन्त तिरुवल्लुवर - तमिल वेद / उत्तरवेद: धर्म, अर्थ एवं काम सविस्तार हिन्दी भाषान्तर)

Tirukkural of Saint Tiruvalluvar in Hindi

सन्त तिरुवल्लुवर (अनुवादक: खेमानन्द 'रहत') द्वारा

DevanagariHindipublished334 पृष्ठ

पृष्ठ 125, कुल 334 में से

संदर्भ में पढ़ें
पृष्ठ 125

102 திருக்குறள் அதிகாரம் 39.

  1. அரசியல்
  2. இறைமாட்சி
  3. படைகுடி கூழ்அமைச்சு நட்புஅரண் ஆறும்
    உடையான் அரசருள் ஏறு.
  4. அஞ்சாமை ஈகை அறிவுஊக்கம் இந்நான்கும்
    எஞ்சாமை வேந்தற்கு இயல்பு.
  5. தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
    நீங்கா நிலன்ஆள் பவர்க்கு.
  6. அறன்இழுக்காது அல்லவை நீக்கி வறன்இழுக்கா
    மானம் உடையது அரசு.
  7. இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
    வகுத்தலும் வல்லது அரசு.
  8. காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
    மீக்கூறும் மன்னன் நிலம்.
  9. இன்சொலால் ஈத்தளிக்க வல்லாற்குத தன்சொலால்
    தான்கண் டனைத்துஇவ் வுலகு.
  10. முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
    இறைஎன்று வைக்கப் படும்.
  11. செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
    கவிகைக்கீழ்த தங்கும் உலகு.
    390 கொடைஅளி செங்கோல் குடிஓம்பல் நான்கும்
    உடையானாம் வேந்தர்க்கு ஒளி.