सङ्गीतदर्पण (दामोदर पण्डित - तंजौर सरस्वती महल संस्करण, सङ्गीत एवं नाट्य लक्षण)
Sangita Darpana of Damodara Pandita (TMSSML Edition)
दामोदर पण्डित (सम्पादक: के. वासुदेव शास्त्री) द्वारा
पृष्ठ 3, कुल 258 में से
संदर्भ में पढ़ेंமுன்னுரை
சதுர தாமோதர பண்டிதர் என்பவரால் இயற்றப்பட்ட "ஸங்கீத
தர்ப்பணம்" என்ற இந்த வெளியீடு ஸரஸ்வதி மஹாலில் பத்திரமாகக்
காப்பாற்றப்பட்டு வருகிற நான்கு பழைய சுவடிகளைக்கொண்டு வெளி
யிடப்பட்டது. இது எல்லோராலும் ஒரு ஆதார நூலாக ஒப்புக்
கொள்ளப்பட்டு வந்த போதிலும், திருப்திகரமான பதிப்பு ஒன்று
இதுவரை வெளி வரவில்லை அந்தக் குறை இந்தப் பதிப்பின் மூலம்
தீரும் என்று நம்புகிறோம்.
இதன் பதிப்பாசிரியர் ஸங்கீத கலா சிகாமணி ஸ்ரீ கே. வாசுதேவ
சாஸ்திரி நமது பழைய நூல்களில் தான் செய்த தீவிர ஆராய்ச்சியின்
பயனை இந்த நூல் பதிப்பிலும் இங்கிலீஷ், தமிழ் முகவுரைகளிலும்
பொதுமக்களுக்கு வழங்கியிருக்கிறார். இந்த முகவுரைகள் ஸங்கீத
ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளோருக்கு நமது ஸங்கீத சாஸ்திரத்தின்
சரித்திர வளர்ச்சியை நன்கு தெளிவுபடுத்தக்கூடியது. இவரது அரிய
சேவைக்கு நமது நன்றி உரித்தாகும்.
இந்த நூலையும் இதுபோன்ற பல அரிய நூல்களையும் வெளி
யிடுவதற்கு நமது அரசாங்கத்தார் செய்துவரும் பொருளுதவிக்கு
நாம் என்றும் அவர்களுக்கு கடமைப்பட்டுள்ளோம்.
ஸரஸ்வதி மஹால், } S. கோபாலன்,
15-8-52 } கவுரவ காரியதரிசி.