सामग्री पर जाएँ
सर्वकोश
तिरुक्कुरळ् (सन्त तिरुवल्लुवर - तमिल वेद / उत्तरवेद: धर्म, अर्थ एवं काम सविस्तार हिन्दी भाषान्तर)

तिरुक्कुरळ् (सन्त तिरुवल्लुवर - तमिल वेद / उत्तरवेद: धर्म, अर्थ एवं काम सविस्तार हिन्दी भाषान्तर)

Tirukkural of Saint Tiruvalluvar in Hindi

सन्त तिरुवल्लुवर (अनुवादक: खेमानन्द 'रहत') द्वारा

DevanagariHindipublished334 पृष्ठ

पृष्ठ 47, कुल 334 में से

संदर्भ में पढ़ें
पृष्ठ 47

திருக்குறள்
I. அறத்துப்பால்

  1. பாயிரவியல்
  2. கடவுள் வாழ்த்து
  3. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
    பகவன் முதற்றே உலகு.
  4. கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
    நற்றாள் தொழாஅர் எனின்.
  5. மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தா
    நிலமிசை நீடுவாழ் வார். `
  6. வேண்டுதல் வேண்டாமை இலான் அடிசேர்ந்தார்க்கு
    யாண்டும் இடும்பை இல.
  7. இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
    பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
  8. பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
    நெறிநின்றார் நீடுவாழ் வார்.
    7 தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
    மனக்கவலை மாற்றல் அரிது.
  9. அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
    பிறவாழி நீந்தல் அரிது
  10. கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான்
    தாளை வணங்காத் தலை
    10 பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
    இறைவன் அடிசேரா தார்.